26 ஆகஸ்ட், 2017

மன்னிக்கவும், என் தற்கொலைக்கு இப்பதான் கொஞ்ச நேரம் கிடைச்சுது!

- ம்... ம்... ம்...
-என்ன?
-செய்திடலாமா?
-செய்து முடிச்சிலாமா?


-ஒரு வழியா நேரம் கிடைச்சுது.
-நானும் எவ்வளது காலம்தான் காத்துக்கொண்டு கிடப்பது?
-செம எரிச்சல்!
-அட! கொஞ்சம் செத்துதான் பார்ப்போமே.
-செத்து பிழைக்குறது சுலபம்தானே!
- என்ன ஆகப்    போவுது?
-என்னதான் இருந்தாலும் ஒருநாள் போவத்தான போறோம், கட்டையில!
-நடுவுல எதுக்கு சும்மா கொழைஞ்சு கொழைஞ்சின்னு ...
-சும்மா எடுத்தோமா, கவுத்தோமான்னு செய்ஞ்சிட்டு போவறத விட்டுட்டு ...


- ...
- ...
- ...
- ...


- ஓ!

- நீங்க அப்படியெல்லம் யோசிக்கிறீங்களா?

அப்படியெல்லாம் நீங்க எதிர்பார்க்கிற மாதிரி எதுவும்  அசம்பாவிதம் ஒன்னும் நடக்காதுங்க.
-இருந்தாலும் இதுவும் ஒரு வித தற்கொலைதான். இதனுள் பலபல கொலைகள் உள்ளன.
-இந்த தற்கொலை என்பது மறுபிறவி எடுப்பதற்கு.
- எல்லாம் சில பல நல்ல காரியஙகளுக்கே.

- பழையன கழிதலும், புதியன புகுதலும் ஆகும்.
என்ன அதுன்னு பார்ப்போங்களா?


கூடு விட்டு கூடு பாயுறதுன்னு கேள்வி பட்டிருக்கீங்களா?
அதேதான் இந்த கதையும்.

அதாவாது, இப்ப உதாரணத்துக்கு, நீங்க வீடு கட்டுறதுக்கு ஒரு மண்ணு வாங்குறீங்கன்னு வெச்சிக்குவோம். ஆனா, அந்த மண்ணுள ஒரு பழைய பாழடைஞ்ச வீடொன்னு இருக்குது. அப்போ என்ன செய்வீங்க? அதை இடிச்சிட்டு புதுசா ஒரு வீட்ட கட்டுவீங்க இல்லையா? அதே போல்தான் இந்த சங்கதியும்.

- இங்க வீட்டுக்கு பதில், பழைய (அதாவது இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்நேரத்து) வாழ்க்கைய முடித்துவிட்டு புதிய வாழ்க்கைய ஆரம்பிப்பதை பற்றியது இந்த புலம்பல்.

- மனதிற்குள் பல நிறைவேறாத  திட்டங்கள், இடிந்து போன கனவுகள், ஏமாந்துபோன ஆசைகள் .... ஆகிய அத்தனை குப்பைகள் அதன் தடயங்கள்
 அழித்த்து என்   வீரன் ஒரு முறைதான் சாவுவான், கோழை ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டே  கிடப்பானாம்.  இங்க கூறப்பட்டு இருக்கும் வீரனுக்கு, குடும்பம், பிள்ளைகள், அறியா வயது பிள்ளைகளை தவிக்க விட்டுவிட்டு சிறிய வயதில் மறைந்த போன துணைவியார், சொந்த பந்தங்கள் இல்லாமை, மேலும் வேலை பிரச்சினை, வீட்டு பிரச்சினை, சமூக, பண்பாட்டு, கலாச்சார, மொழி, இன பிரச்சினைகள் போன்றவைகள் இருந்திருக்குமா என சந்தேகமாகவே இருக்கிறது. மாறாக, இங்கே பார்க்கும் கோழை எனப்படுபவன் அமைதி, பொறுமை, நிதானம் போன்றை மேன்மையான  தகுதிகளை பின்பற்றி வாழ்பவனாக இருந்தவன் என ஒப்புக்கொள்ளலாம் அல்லவா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக