12 ஜூன், 2019

முப்பரிமாண உலோக பொருள் ஆக்கம் தானியங்கி தொழில் நுட்பம்.
4 நிமிடங்கள் HD காணொலி. Metal 3D printer and 5 axis milling-machine.
-
கணினி கோட்பாடுகளுக்கு கட்டுப்பட்ட தானியங்கி  உலோக முப்பரிமாண பொருள் ஆக்கம் மற்றும் பன்முக கோணலில் கடைதல் தொழில் நுட்பம்.
-
Hybrid machine (3D printer and 5 axis milling-machine)
-
இந்த தானியங்கி இயந்திரம் செய்யும் அற்புத காட்சிகளை பாருங்கள்.
-
முதலில் உலோக துகள்களை எரி வாய்வு உதவியுடன் முப்பரிமாண கோணத்தில் வடிவம் கொடுத்து உருவாக்கி பிறகு அவைகளை பன்முக கோணலில் கடைந்து நாம் வேண்டிய பொருட்களை செய்து கொடுக்கிறது இவ்வியந்திரங்கள். இவ்வனைத்தையும் மனித உதவியின்றி தனியாக கணினி திட்டமிட்டபடி செய்து முடிக்கிறது. தற்கால தொழில் நுட்பம் முன்னேறி இருக்கும் பிரமிக்க வைக்கும் நிலையை கவனிக்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.-
நாம் இது நாள்வரை படித்து பார்த்து கற்று வந்த பலதரப்பட்ட மனிதர்களின் கடின ஆபத்தான உழைப்பு, பெருந்தொகை முதலீடு, தேவையான நேரம், இடம், மூளப்பொருள் இவையெல்லாவற்றையும் அர்த்தமற்றதாக ஆக்கிவிட்டது இப்படியான தொழில் நுட்பங்கள். மனித உழைப்பு சார்பற்ற இது போன்ற  இயந்திரங்கள் இருப்பது நல்லதா கெட்டதா என்பது ஒரு பக்கம் கேள்விக்குறியதே. இருந்தாலும், இவ்வியந்திரங்கள் போன்ற அதி நவீன அற்புத தொழில் நுட்பங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றனவே. இவைகள், வின்கலன்கள், செயற்கை கோள்கள், விமான உதிரி பாகங்கள், நவீன போர் ஆயுதங்கள், கடல்மூழ்கி கலன்கள் ... போன்றவைகள் தயாரிப்பிற்கு உதவியாக இருக்கும். மேலும், புதியவகை தொழில் நுட்ப கண்டுபிடிப்பாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு தேவைப்படும் இயந்திரங்கள் உருவாக்க தேவைப்படும் பாகங்கள் செய்வதற்கு ஏற்றதாக இவைகள் இருக்கும்.
-
இவ்விழியத்தை இளைஞர்கள் மற்றும் குழந்தைகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.