14 ஜூன், 2019

உச்ச அழுத்த தண்ணீர் பீச்சில் உலோகங்கள் வெட்டும் அற்புதம்!


3 காணொலிகள், 16 படங்கள் : How water jet cutter works?

தண்ணீருக்கு பலவகை இயற்கையான அற்புத தன்மைகள் உண்டு என்பதை நாம் அறிவோம்.

திரவிய நிலையில் இருக்கும் தண்ணீரை சூடாக்கி அதன் அளவை விரிவு படுத்தலாம்.
கொதிக்க வைத்து நீரை ஆவியாக்கலாம்.

அதனை குளிர்படுத்தி 0 டிகிரி கீழ் பனி கட்டியான திடப்பொருளாகவும் மாற்றலாம்.

இதே தண்ணீருக்கு மற்றுமொரு அற்புத தன்மை ஒன்றுண்டு.
காற்றைப்போல் அல்லது வேறு சில திடப் பொருட்களைப்போல் தண்ணீருக்கு அழுத்தம் கொடுத்து அதன் திரவ நிலை மொத்த அளவை சுறுக்கவே முடியாது. என்னதான் அதி நவீன தொழில் நுட்பம் உடைய இயந்திரங்களாக இருந்தாலும் இதை செய்ய முடியாது.

உலகில் அபரிதமாக எங்கும் இயற்கையாக கிடைக்கும் தண்ணீரின் இந்த அற்புத தன்மையை அடிப்படையாக கொண்டு இப்போது பல விதமான உலோகங்கள், கல், பாறை, கண்ணாடி, பிலாஸ்டிக், மரம் ... என அனைத்து வகை திடப்பொருட்களை வெட்டலாம் மேலும் புது உருவம் கொடுக்கலாம்.

முதலில் இங்கு இருக்கும் படங்களில் தண்ணீரால் வெட்டப்பட்ட இரும்பு மற்றும் அலுமினியத்திலான திடப்பொருட்கள் சிலவற்றை காணுங்கள்.


என்ன நண்பர்களே! நம்ப முடிகிறதா? ஆச்சரிமாக இருக்கிறதா?
மூளப்பொருட்களின் மொத்தத்தையும்-அகலத்தையும் கவனித்தீர்களா?
-
இப்போது கீழுள்ள முதல் காணொலியை காணுங்கள். 36 நிமிடங்கள் ஓடும் இதில், இவ்விளைஞர் இந்த இயந்திரம் இயங்கும் ஒவ்வொரு படி நிலைகளையும், செய் முறைகளையும், தேவைப்படும் மூளப்பொருட்கள் பற்றியும், கணினி உதவி கணக்குகள் மற்றும் அதன் கோட்பாடுகள் என அனைத்தையும் நன்கு அற்புதமாக விளக்குகிறார்.
 
இப்போது 3 நிமிடங்கள் ஓடும் இந்த காணொலியை பாருங்கள்.கடைசியாக, 12 நிமிடங்கள் ஓடும் இந்த காணொலியை காணத்தவறாதீர்கள். மேலே உள்ள படங்களில் நீங்கள் பார்த்த அனைத்து பொருட்களையும் வெட்டும் காட்சிகளை உள் அடக்கியது.நன்றி.
வாழ்க வளமுடன்.